ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதியின் ஆசிகளால் திருப்பூர் காந்தி நகரில் குருகுலமாக இருக்கிறது. திருப்பூர் அரிசிக்கடை வீதியில் இருக்கும் கே.என்.பில்டிங் மாடியில் (Gk Astro Foundtaion ) எனது ஜோதிட ஆய்வுப் பணி தொடர்கிறது. நான் இதுவரை ஜோதிடத்தில் பல நுண்ணிய ஆய்வுகளைச் செய்து பிரசன்னம், ஜோதிடம். நாடி ஜோதிடம், மருத்துவ ஜோதிடம் ஆகியவற்றில் இதுவரை 41 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் ஜீவ ஜோதிடம் என்ற ஜோதிடப்பத்திரிக்கையில் கெளரவ ஆசிரியராக கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி. கட்டுரைகள் எழுதி வந்தேன். சென்னை வளசரவாக்கத்தில் GK அஸ்ட்ரோ அகாடமியை உருவாக்கி அங்கும் ஜோதிடப்பயிற்சிகளையும், ஜோதிட பிரசன்ன ஆய்வுகளையும் செய்கின்றேன். ஒரு பத்திரிக்கையை சுமார் இரண்டரை ஆண்டுகள் நடத்தி வந்துள்ளேன். பல்லாயிரம் ஜோதிடர்களையும், பலநூறு ஜோதிட ஆசிரியர்களையும். உருவாக்கி யுள்ளேன். சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, ஈரோடு, தாராபுரம், காஞ்சிபுரம், மதுரை, பரமக்குடி, திருநெல்வேலி, தர்மபுரி, ஓசூர், கும்பகோணம், கரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவண்ணாமலை, பெங்களுரு போன்ற இடங்களில் ஜோதிட வகுப்புக்களையும், பிரசன்ன வகுப்புக்களையும், ஜோதிட ஆராய்ச்சி சொற்பொழிவுகளையும் நடத்தியுள்ளேன். இன்னும் பல புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலும் சிறப்பான ஜோதிட ஆய்வுகளைச் செய்து ஜோதிடத்தில் பல புதுமைகளையும், புரட்சிகளையும் செய்து சாதனை புரிய வேண்டும் என்பது என் அவா. அதற்காக தினமும் தனிக்கவனம் எடுத்து உழைத்து வருகின்றேன். எனது புதிய கோணங்கள் மாணவர்களிடையே எடுத்துக்கூறப்பட்டு, பல ஆய்வுகளுக்குப் பின் வகுப்புகளாகவும், புத்தகங்களாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சிறந்த ஜோதிடச் சாதனைகளைச் செய்ய அனுநொடியும் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணதியின் ஆசிகளுடன் திட்டமிட்டு உழைத்து வருகின்றேன். நன்றி
About Gk Astro Academy
ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதயே நமஹ ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியின் ஆசிகளாலும், நமது GK அஸ்ட்ரோ பவுண்டேன் நிர்வாகக்குழு மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையாலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்யாத சிறந்த ஜோதிட ஆர்வலர்களைக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டது, திரு.அசோகன் அவர்கள் தலைமையில் மற்ற நண்பர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்களின் வழிகாட்டுதலில் தற்போது (Gk Astro foundation Tirupur) இக்குழு ஜோதிடச்சேவையைச் செய்து வருகிறது. தற்போது சென்னை வளசரவாக்கத்தில் Gk Astro Academy உருவாக்கப்பட்டு சிறப்பாகச் புதுவேகத்தில் செயல்பட்டுவருகிறது. மேலும் சங்கரன் கோவிலிலும் திருப்பூர் கிளை உருவாக்கப்பட்டு திருமதி. அஸ்வனி. K. தங்கலட்சுமி அவர்களால் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருப்பூரின் நிர்வாகப் பொறுப்புக்களை கோவை, திரு. எஸ்.சுரேஷ் அவர்களும் சென்னையின் நிர்வாகப் பொறுப்புக்களை திரு. K.S. அசோகன் அவர்களும், சங்கரன் கோவில் நிர்வாகப் பொறுப்புக்களை சங்கரன் கோவில் அஸ்வனி K. தங்கலட்சுமி அவர்களும் நிர்வகித்து வருகிறார்கள்.
Gk பவுண்டேஷனின் நோக்கம்
சிறந்த ஜோதிடர்களை உருவாக்குவது,
காலத்திற்குத் தக்கபடி சிறந்த ஜோதிட கருத்துக்களை உருவாக்குவது, உருவாக்கிய கருத்துக்களை வகுப்புக்களாகவும், சொற்பொழிவாகவும் நிகழ்த்துவது. அக்கருத்துக்கள் அனைவருக்கும் பயன்படும்படி ஜோதிட புத்தகங்களை எழுதுவது போன்றன இதன் முக்கிய நோக்கமாகும். நமது பவுண்டேஷன் பலரின் உதவியோடும், துணையோடும், சிலரது உழைப்பாலும், சிலர் திட்டமிட்டுக் கொடுத்ததாலும் புத்தாண்டில் சந்தோஷமாக அடியெடுத்து வைக்கிறது.
தலைசிறந்த ஜோதிட ஆய்வு பதிவுகளை புத்தகம், மற்றும் எழுத்து சார்த்து பதிவுகளைச் செய்தல் என்பது முக்கியமான வேலைகளாக இருக்கிறது.